Sunday, September 9, 2007

20.07.2007: சரியானவர்கள்...

எல்லோருக்குமே மற்றவர்கள் சரி இல்லை என்றும் தாங்கள் மட்டுமே சரியானவர்கள் என்ற எண்ணமே மேலோங்கி உள்ளது. இப்படி யோசித்தபோது உதித்தது இது :)

சரியானவர்கள்

நான் வண்டி ஓட்டும்போது
நடுவில் வந்த நாயைப்
பார்த்து அறிவு இல்லாம
படக் என்று வருகிறதே
என்று சொல்லிக் கொண்டேன்
எனக்கு நானே கோபத்தோடு,

மெதுவா பாத்து போவதற்கு
முடியாதா இவனுக்கு என்று
நாய் நினைப்பது தெரியாமல்!

26.10.2006:ஏதோ ஒரு சாதனை

கின்னஸ் சா(வே)தனை

பெண்ணே,
எனை நீ பிரிந்ததும்
என்னுயிர் நீங்கி வெறும் கூடானேன்.

நடமாடும் உயிரற்ற கூடு
என்றும் கின்னஸ் சாதனை
என்றும் என்னைப் புகழ்ந்தார்கள்.

உனை பிரிந்த வேதனையில் வாடும்
எனக்கு இது கின்னஸ் சாதனையா?

இல்லையடி என் உயிரே,
அது தீராத கின்னஸ் வேதனையடி!!!

26.10.2006: அப்பப்போ வருவது நல்லதுதான்...

தோற்பேனடி

தோற்பது -
எவருமே விரும்பாத,
வருத்தந் தரக்கூடியஒரு நிகழ்வு.

ஆனால்,
உன்னிடம் தோற்றாலோ
நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்!

அதனால், கண்ணே
நான் மகிழ்ச்சியடைய
உன்னிடம்
மீண்டும் மீண்டும் தோற்பேனடி!!