Monday, March 16, 2009

17.Mar.2009: பத்திலிருந்து ஒன்று வரை...

பத்திலிருந்து ஒன்று வரை...
பத்தாவது படித்த நாளில் 
இருந்தே ஏதும் விளங்கவில்லை...
ஒன்பது வருடங்களுக்கு பிறகு
உன்னைப் பார்த்தும் விளங்கிவில்லை...
எட்டுத் திக்கிலிருந்தும் உன்
நினைவு என்னை சூழ்ந்ததால்
ஏழு பரிட்சையில் தேறாமல்
அரியர்ஸ் எல்லாம் வாங்கியபோதும்...
ஆறு செமஸ்டருக்குள் அனைத்தையும்
முடிக்க முடியாமல் போனபோதும்...
ஐந்தாண்டு திட்டம் போட்டு
அவற்றை எப்படியோ முடித்தபோதும்...
நான்கு இலக்க சம்பளத்திலோர்
வேலையில் சேர்ந்த பிறகும்...
மூன்று நிலை முன்னேறிய
பொழுதிலும் உன்னைப் புரியவில்லையடி.
இரண்டாம் தேதியன்று திருமணம்
என்ற அந்த கணத்தில்தான்
ஒன்றல்லாது அனைத்துமே விளங்கியது
நானொரு முட்டாள் என்பதுட்பட!!

Saturday, March 14, 2009

15.Mar.2009: நன்றி

நன்றி
புகைப்படத்தோடு ஜாதகத்தை இணைத்து அனுப்பியதும்
அனைத்தும் நன்றாக பொருந்தியுள்ளது என்றும்
ஒரு தேதியில் வருகிறோம் என்றறிவித்து
அந்த தினத்தன்று ஒரு குழுவோடு
பாட்டன் காலத்து விஷயத்தில் ஆரம்பித்து
எங்களின் தற்கால விஷயங்கள் வரை
அலசிவிட்டு, எங்களின் விருந்தோம்பலில் வயிறாறி
அப்புறமாய் சொல்லுகிறோம் என்று கூறி
யுகம் கழிந்தும் சேதியேதும் வராததால்
உண்டான மன உளைச்சலுக்கு வித்திட்ட
நக்கீரன் குடும்பத்தில் நீயும் ஒருவன்தான்
என்றாலும் - இனி அந்த மன உளைச்சலுக்கு
முற்றுப்புள்ளி வைத்துவிட்ட உனக்கு நன்றிகள் கோடி!!!!

Wednesday, March 11, 2009

11.Mar.2009: வேண்டாமே இந்த ஹோலி...

வேண்டாமே இந்த ஹோலி...
எங்கெங்கு காணினும்
யுத்தம்...
வெடிச் சத்தம்...
கலக்கத்தோடு மக்கள்...
கூக்குரலோடு அலறல்கள்...
ரத்தத்தால் உறைந்த பூமிப்படுக்கை...

உலகை வண்ணமயமாக்காமல்
ரத்தமயமாக்கிக் கொண்டிருப்பவர்களே...
வேண்டாமே உங்கள் இந்த ஹோலி கொண்டாட்டம்!!!!

Wednesday, March 4, 2009

02.Oct.08: யோசனை...

யோசனை...

பிறந்த நாளுக்காகவோ...
வீட்டில் நல்ல விஷயத்துக்காகவோ...
அலுவலகத்தில் பதவி உயர்வுக்காகவோ...
கல்யாணம் முடிவு ஆனதற்காகவோ...

இப்படி
ஏதோ ஒரு காரணத்துக்காக
நண்பர்களோடு ஓர் உணவகத்தில்
நன்றாக கதைத்து உண்டபின்...

சில ஆயிரத்தை தாங்கி வந்த
bill-க்கு debit அல்லது credit card-இல்
தேய்த்து விட்டு கையெழுத்திட - ஒரு கணம்
கூட யோசிக்காத என் மனம்

சாலையோரத்திலோ, கோவில் வாசலிலோ
பிச்சை கேட்போருக்கு ஒரு ரூபாய்
போடுவதற்கு ஏனோ அவ்வளவு யோசிக்கிறது!!!