Thursday, October 25, 2007

25.07.2007: நான் கடவுள்!

நான் கடவுள்!

நானும் ஒரு
கடவுள் தான்!

உன்னைப் பார்த்த நாள் முதலாய்
உன்னுடைய நினைவன்றி யாவற்றையும் உதறியதால்
நான் ஒரு புத்தன் ஆனேன்...

ஒரு கன்னத்தில் நீ முத்தமிட்டதும்
மறு கன்னத்தை உனக்குக் காட்டியதால்
நான் ஏசு பிரான் ஆனேன்...

எனவே தான் சொல்கிறேன் - என்னவளே,
உன்னால் நானும் ஒரு கடவுள் தானடி!

20.07.2007: என் சிறு வயதில் யோசித்தது...

நான் 8/9-ஆவது படிக்கும் போது எழுதியவை இவை :)

போட்டி

விளையாட்டில் சண்டை -
பதக்கங்களுக்காக, சரி!

ஆனால்,
சிலர் போடும் ஜாதிச்
சண்டைகள் எதற்காக?
--------------------------
அறியாமை

உன் அழகிய சிரித்த முகம்
கண்டு மன மகிழ்ந்தேன்
என் பின்னால் இருப்பவனைப் பார்த்து
நீ சிரிக்கிறாய் என்ப தறியாமல்.
--------------------------
அர்த்தம்

நான் உன்னைக் காதலிக்கிறேன்,
நான் உன்னை விரும்புகிறேன் - என்று
கூறியபோதெல்லாம் மௌனித்த நீ,
இப்போது உனக்காக சாகக்கூட தயார்
என்றதும் சரி என்கிறாய்.

இதற்கு அர்த்தம் - நீ என்னை
விரும்புகிறாய் என்பதா அல்லது
நான் மடிய வேண்டும் என்பதா?

20.07.2007: முரண்

முரண்

தன் உடம்பை மிகவும்

வருத்தி நன்கு முறுக்கேற்றி

ஒரு வெறியோடு உழைத்து

போட்டியில் கலந்து கொண்டு

"ஆணழகன்" பட்டத்தை வென்றான்,

தன் தாய் மற்றவர்

முன்பு அவனைச் செல்லமாக

அழகா என்று கூப்பிட்டதற்கு

கோபித்துக் கொண்ட அவ்வீரன்!