Tuesday, August 19, 2008

07.Aug.08: இறைவா... உதவு!!!

இறைவா... உதவு!!!
பெண்ணே...
எனக்கு உன் சிரிப்பு மட்டுமே போதும்
வேறெதுவும் தேவை இல்லை.
இப்படி உன்னை போன்று ஒருத்தி
யாவர்க்கும் கிடைத்தால் - பின்
எதற்குமே எங்குமே கவலை இருக்காதே.
இறைவா...அனைவர்க்கும் உதவு!!!!

Wednesday, August 13, 2008

09.Aug.2008: வெளிநாடு

வெளிநாடு
பக்கத்து தெருவும் வெளிநாடானது
கடன் அளித்தவன் வீடிருந்ததால்!!!

வருத்தம்...

வருத்தம்
என் இதயத்தில் ஓட்டை
என்று வருத்தத்துடன் சொன்னார்கள்
என்னை பரிசோதித்த மருத்துவர்கள்...
அது,
அங்கே வசிக்கும் என்னவளுக்கு மூச்சு முட்டாது
இருக்க நான் ஏற்படுத்திய ஓட்டை என்றறியாமல்!!!

என்னவள்...

என்னவள்
எனக்கே தெரியாமல்
என் இதய வீட்டினுள்
குடி புகுந்து - அதை
தனது சொந்தமாக்கிக் கொண்டவள்!!